மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்
கடலூர்:
தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்கு மாவட்ட ஆட்சியர் அமைத்துக் கொடுத்த சாலையை, தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்துக் கொண்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திங்கள்கிழமை புகார் தெரிவித்தனர்.
அக்கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் சு.திருமாறன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட மக்களுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகார் மனு:
சிதம்பரம் வட்டம் திட்டுக்காட்டூரில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்குச் செல்ல நீண்டகாலமாகப் பாதை இல்லாமல் இருந்தது. அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக அங்கு அவர்களுக்குச் சாலை வசதி செய்து கொடுக்கப்பட்டது. ஆனால் தனிநபர்கள் சிலர் இப்பாதையை சட்ட விரோமாக ஆக்கிரமித்து விட்டனர். இதனால் சாதிய மோதல் ஏற்படும் அபாயம் உள்ளது. தொண்டு நிறுவனம் ஒன்று, இப்பகுதி மக்களுக்கு வீடு கட்டித்தர இருக்கும் திட்டமும் இதனால் தடைபட்டு வருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். இல்லையேல் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக