விருத்தாசலம் :
வெலிங்டன் ஏரியில் உள்ள வண்டல் மண்ணை விவசாயத்திற்கு இலவசமாக வழங்கக் கோரி விவசாய சங்க கூட்டமைப்பு முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து விவசாய சங்க கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் கார்மாங் குடி வெங்கடேசன் முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
திட்டக்குடி வட்டம் இடைசெருவாய் கிராமத்தில் மிகப்பெரிய வெலிங்டன் ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம் 45 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெருகிறது. கடந்த 25 ஆண்டுகளாக வெலிங்டன் ஏரி தூர் வாரப்படாமல் வண்டல் மண் படிந்துள்ளது. இதனால் ஏரியின் நீர்பிடிப்பு பகுதியின் உயரம் குறைந்தும், எரியின் கரை வலுவிழந்தும் உள்ளதால் கடந்த 10 ஆண்டுகளாக முழு அளவு தண்ணீர் தேக்க முடியவில்லை. இதனால் கார்மாங்குடி, சத்தியவாடி, கருவேப்பிலங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 3 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது. எனவே ஏரியின் உட்புறத்தில் உள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும். இதனால் ஏரியின் ஆழம் அதிகரித்து நீர் பிடிப்பு அதிகரிக்கும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக