உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 01, 2010

துப்பாக்கியுடன் வீடுகளுக்குள் புகுந்து மிரட்டிய செல்ஃபோன் நிறுவனத்தினர்

கடலூர்:

               செல்ஃபோன் நிறுவனத்தினர் துப்பாக்கியுடன் வீடுகளுக்குள் நுழைந்து மிரட்டிய சம்பவம், கடலூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு பரபரப்பை ஏற்படுத்தியது.

               தனியார் வங்கிகளில் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாதவர்கள் வீடுகளில், அந்த வங்கியின் ஊழியர்களே புகுந்து மிரட்டும் சட்டவிரோதச் செயல், ஏற்கெனவே தமிழகத்தில் நடந்துள்ளது. அத்தகைய தனியார் வங்கி ஊழியர்கள் வரிசையில் தற்போது, தனியார் செல்ஃபோன் நிறுவனத்தினரும் சேர்ந்துள்ளனர்.கடலூர் செம்மண்டலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு காவல்துறை வாகனங்களைப்போல், புழுதியைக் கிளப்பியவாறு 3 வாகனங்கள் வேகமாகப் பாய்ந்து வந்தன. வாகனங்களில் இருந்து இறங்கிய சுமார் 20 பேர், செல்ஃபோன் மெகானிக் திருமாறன் வீடு எங்கே என்று அதிகாரத் தோரணையில், பரபரப்புடன் கேட்டனர். அவர்கள் கைகளில் துப்பாக்கி இருந்தது. அந்தக் கும்பல் ஒரு வீட்டுக்குள் அதிரடியாகப் புகுந்து சோதனையில் ஈடுபட்டது.அந்த வீட்டில் இருந்தவர்கள் திருமாறன் யார் என்று தெரியாது நீங்கள் யார் என்று பதற்றத்துடன் கேட்டனர்.  திருட்டுப் பொருள்கள் இருக்கிறதா என்று சோதனையிட வந்து இருக்கிறோம் என்று அவர்கள் பதில் அளித்தனர். 

                 அங்கிருந்து வெளியேறிய அக்கும்பல், மற்றொரு வீட்டுக்குள் நுழைந்தது. திருமாறன் வீடு இதுதானா என்று வினவியபடியே, வீட்டைச் சோதனையிட முயன்றது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வந்தவர்கள் காவல்துறையினர் அல்ல என்று தெரிந்த பொதுமக்கள், கடலூர் புதுநகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸôர் விரைந்து வந்து, அந்தக் கும்பலை சுற்றி வளைத்து, காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.அவர்களை விசாரித்ததில் அனைவரும் தனியார் செல்ஃபோன் நிறுவனத்தைச் சேர்ந்த பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் என்று தெரிய வந்தது. அந்த நிறுவனத்தில் செல்ஃபோன் சாதனங்கள் சில திருட்டுப் போய்விட்டதாகவும், நிறுவனத்தில் பணியாற்றிய திருமாறன்தான் அவற்றைத் திருடிச் சென்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், நேரடியாக அவரது வீட்டைத் தேடியிருக்கிறார்கள் என்றும் தெரியவந்தது. பொருள்கள் திருட்டு போனால் காவல்நிலையத்தில் புகார் கொடுத்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் நிலைய அனுமதியின் பேரில்தான், எந்த வீட்டிலும் சோதனையிட முடியும். அதைவிடுத்து சட்டத்தைத் தாங்களே கையில் எடுத்துக் கொண்டு, பொதுமக்களுக்குப் பீதியை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்று அறிவுரை வழங்கிய போலீஸôர், அவர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு விடுவித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior