உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 01, 2010

உடல் ஆரோக்கியமாக இருந்தால் தீய எண்ணங்கள் வராது: டி.ஐ.ஜி., மாசானமுத்து பேச்சு

விருத்தாசலம் : 

                   உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தால் தீய எண்ணங்கள் வராது என விருத்தாசலத்தில் நடந்த விழாவில் டி.ஐ.ஜி., மாசானமுத்து பேசினார். விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி அருகில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அரிமா சங்கத்துடன் இணைந்து கட்டப்பட்ட விளையாட்டு மைதானம் திறப்பு விழா நடந்தது. அரிமா மாவட்ட நிர்வாகி அகர்சந்த் தலைமை தாங்கினார். மண்டல ஆளுனர் ரத்தினசபாபதி, மாவட்ட ஆளுனர் குப்புசாமி, துணை ஆளுனர் சுவேதாகுமார், விளையாட்டு குழு சேர்மன் சுரேஷ்சந்த் முன்னிலை வகித்தனர். அரிமா சங்க தலைவர் அருணாசலம் வரவேற்றார். ஆர்.டி.ஓ., முருகேசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம், சேர்மன் முருகன், அரிமா சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் ஸ்ரீதர், ஊர்காவல்படை தளபதி ரவீந்திரநாதன், துணை தளபதி தண்டபாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்து டி.ஐ.ஜி., மாசானமுத்து பேசியதாவது: 

                   புவி வெப்பமாதல் உள்ளிட்டவைகள் உலகை அச்சுறுத்தி வரும் வேளையில் நாம் ஆரோக்கியத்துடன் வாழ உடற்பயிற்சி அவசியமாகிறது. இப்பகுதி மக்கள் இந்த மைதானத்தை நன்கு பயன்படுத்தி தங்களது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். உடல் ஆரோக்கியமாக இருந் தால் தீய எண்ணங்கள் வராது. மைதானத்திற்கு அருகிலேயே கல்லூரி இருப்பதால் கல்லூரி இளைஞர்கள் மைதானத்தை பயன்படுத்தி விளையாட்டில் சாதிக்க முயற்சிக்க வேண் டும். இந்த மைதானத்திற்கு மேலும் பல வசதிகள் செய்து தர இங்குள்ள அரசியல் தலைவர்கள் முயற்சிக்க வேண்டும். இவ்வாறு டி.ஐ.ஜி., மாசானமுத்து பேசினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior