கடலூர்:
குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் புதன்கிழமை திடீர் ஆய்வு நடத்தி, செயற்கை முறையில் பழுக்க வைத்த 1 டன் மாம்பழங்களைப் பறிமுதல் செய்து அழித்தனர்.
ஒரே நேரத்தில் பழுக்கவும், ஒரே மாதிரியாக நிறம் வருவதற்காகவும், கால்சியம் கார்பைடு ரசாயனக் கற்களை, மாம்பழச் சேமிப்புக் கிடங்குகளில் துணிகளில் கட்டிப்போட்டு பழுக்க வைக்கிறார்கள். செயற்கையாகக் கால்சியம் கார்பைடு கற்களைப் பயன்படுத்தி மாம்பழங்களைப் பழுக்க வைப்பதால், அவற்றை உண்போருக்கு உணவில் நச்சுத் தன்மை ஏற்பட்டு, வயிற்றுப்போக்கு, வயிற்றுப்புண் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் ஆர்.மீரா உத்தரவின் பேரில், வடலூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் லட்சுமி சீனிவாசன் தலைமையிலான அதிகாரிக புதன்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட சுமார் 1 டன் மாம்பழங்களை, கடைகள் மற்றும் சேமிப்புக் கிடங்களில் இருந்து கைப்பற்றி பறிமுதல் செய்து அழித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக