கடலூர்:
"கான்கிரீட்' வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 10 ஆயிரம் வீடுகள் கான்கிரீட் வீடுகளாக கட்டித் தரப்படும் என கலெக்டர் சீத்தாராமன் கூறினார்.
கடலூர் அடுத்த பூச்சிமேடு கிராமத்தில் சிறப்பு மனு நீதிநாள் முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் ராதிகா வரவேற்றார்.
கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கி, வருவாய்த்துறை, சமூகநலத் துறை, தோட்டக்கலைத்துறை, உட்பட பல்வேறு துறைகளின் மூலம் 96 பேருக்கு 6.99 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:
பூச்சிமேடு கிராமத்தில் 8.75 லட்சம் ரூபாய் மதிப்பில் சமுதாயக் கூடமும், காயல்பட்டு கிராமத்தில் உள்ள சமுதாயக் கூடத்தை 1 லட்சம் ரூபாயில் பழுது நீக்கவும் கலெக்டர் நிதியில் இருந்து நிதி ஒதுக்கப்படும். காயல்பட்டு காலனி பகுதியில் 3 லட்சம் மதிப்பில் கழிவு நீர் கால்வாய் வெட்டப்படும். முதல்வர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 10 ஆயிரம் வீடுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் 6 ஆண்டுகளில் "கான்கிரீட்' வீடுகளாக கட்டித் தரப்படும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
முகாமில் மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கணபதி, மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட உதவி கலெக்டர் கந்தசாமி, ஆர்.டி.ஓ., கேசவமூர்த்தி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அன்பழகி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலர் சீனுவாசன் உட்பட பலர் பங்கேற்றனர். ஊராட்சி துணைத் தலைவர் திருநாவுக் கரசு நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக