கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் இ.எஸ்.ஐ., சந்தாதார தொழிலாளர்கள் தனியார் மருத்துவமனைகளில் இ.எஸ்.ஐ., டாக்டர்கள் பரிந்துரையின் பேரில் இலவச சிகிச்சை பெற்றுக் கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இ.எஸ்.ஐ., கிளை அலுவலக மேலாளர் எழிலரசன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக சட்டத் தின்படி இதுவரை மொத்த மாதச் சம்பளம் 10 ஆயிரம் ரூபாய் வரை பெற்றவர்களுக்கு இ.எஸ். ஐ., சந்தா பிடித்தம் செய்யப்பட்டு வந்தது. தற்போது கடந்த 2010ம் ஆண்டு மே மாதம் முதல் தேதி முதல் 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு அவர்களுக்கும் இ.எஸ்.ஐ., சந்தா பிடிக்கப்படுகிறது. மேலும் தொழிலதிபர்கள் மற்றும் தொழிலாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க இ.எஸ்.ஐ., சந்தா தொழிலாளர்கள் தனியார் மருத்துவமனைகளிலும் எந்தவித தொகையும் செலுத்தாமல் கடலூர் இ.எஸ்.ஐ., மருத்தக டாக்டர் துரைராஜ், நெல்லிக்குப்பம் மற்றும் வடலூர் இ.எஸ்.ஐ., டாக்டர் திருநாவுக்கரசு ஆகியோரின் பரிந்துரையின் பேரில் கடலூர் கிருஷ்ணா மருத்துவமனை, வள்ளிவிலாஸ் மருத்துவமனை, அபிராமி மருத்துவமனை (டாக்டர் பாண்டியன் ஆர்த்தோ), வடலூர் சுதா மருத்துவமனை, வடக்குத்து உலகமதி மருத்துவமனை ஆகியற்றில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக