உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 02, 2010

கடலூர் மாவட்டத்தில் புதிய வாக்காளர் பட்டியல் வெளியீடு

கடலூர்:

              2010-ம் ஆண்டுக்கான சுருக்கமுறைத் திருத்த புகைப்பட வரைவு வாக்காளர் பட்டியலை கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வியாழக்கிழமை வெளியிட்டார்.

வாக்காளர் பட்டியலை வெளியிட்டு மாவட்ட ஆட்சியர் கூறியது: 

               கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. புதிய வாக்காளர் பட்டியல் வாக்காளர் பதிவு அலுவலகங்களிலும், அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், அஞ்சல் அலுவலகங்களிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது. 16-ம் தேதி வரை அனைத்து வேலை நாள்களிலும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டு இருக்கும். சம்பந்தப்பட்ட குடியிருப்போர் நலச் சங்கங்களிலும் வாக்காளர் பட்டியல் நகல் வைக்கப்பட்டு இருக்கும்.

              எனவே மேற்கண்ட தினங்களில் பொதுமக்கள், இந்த இடங்களில் வைக்கப்பட்டு இருக்கும் வாக்காளர் பட்டியலைப் பார்வையிட்டு, தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ளலாம். அவர்களது பெயர் விடுபட்டு இருப்பின், படிவம் 6 ஐ பூர்த்தி செய்து, தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை இணைத்து விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் 10-7-2010 மற்றும் 11-7-2010 ஆகிய இரு தினங்கள் சிறப்பு முகாம்கள் நடத்தி, வாக்காளர் சேர்க்கைக்கான மனுக்களை பெறவும் தேர்தல் அணையம் அறிவுரை வழங்கி உள்ளது. சிறப்பு முகாம் நடைபெறும் தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, விண்ணப்பங்களைப் பெறவதற்கு, அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

தற்போதைய வாக்காளர் பட்டியிலின்படி சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை:

திட்டக்குடி (தனி): 

           ஆண்கள் 81,064 பெண்கள் 80,087.  மொத்தம் 1,61,151. 

விருத்தாசலம்: 

          ஆண்கள் 90,661 பெண்கள் 86,579 மொத்தம் 1,77,240. 

நெய்வேலி: 

            ஆண்கள் 75,781 பெண்கள் 71,715 மொத்தம் 1,47,496. 

பண்ருட்டி: 

           ஆண்கள் 87,410 பெண்கள் 86,322 மொத்தம் 1,73.732. 

கடலூர்: 

           ஆண்கள் 79,989 பெண்கள் 80,109 மொத்தம் 1,60,098. 

குறிஞ்சிப்பாடி: 

          ஆண்கள் 84,800 பெண்கள் 80,098  மொத்தம் 1,64,898. 

புவனகிரி:  

            ஆண்கள் 97,136 பெண்கள் 92,540 மொத்தம் 1,89,676. 

சிதம்பரம்: 

             ஆண்கள் 84,868. பெண்கள் 83,016 மொத்தம் 1,67,884. 

காட்டுமன்னார்ககோயில் (தனி):

                ண்கள் 86,465 பெண்கள் 80,083 மொத்தம் 1,66,548.
  
கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளில் மொத்த வாக்காளர்கள்: 

                  15,08,723. ஆண்கள் 7,68,174. பெண்கள் 7,40,549.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior