உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 02, 2010

என்எல்சி ஸ்டிரைக்: இன்று பேச்சுவார்த்தை



நெய்வேலி:
 
               என்எல்சி தொழிலாளர்களின் ஊதியமாற்று ஒப்பந்தத்துக்கான நிலுவைத் தொகைகளை 01-01-2007 முதல் வழங்க வலியுறுத்தி என்எல்சி தொழிலாளர்கள் புதன்கிழமை (ஜூன் 30) இரவுப் பணி முதல் மேற்கொண்ட காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் வெள்ளிக்கிழமையும் நீடிக்கிறது. வியாழக்கிழமை, மத்திய தொழிலாளர் நல ஆணையர் எம்.எம்.ஜகன்னாதராவ் மற்றும் உதவி ஆணையர் சிவசங்கரன் முன்னிலையில் என்எல்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் டி.லூர்தஸ்,  ஓ.எஸ்.அறிவு, தொழிற்சங்க நிர்வாகிகள் ஆர்.கோபாலன், வீ.ராமச்சந்திரன், எ.காத்தவராயன், எ.பெருமாள், வீ.திலகர், ஏஞ்சலின் மோனிகா, சுப்பிரமணியன் உள்ளிட்டோர் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை வியாழக்கிழமை இரவு வரை நீடித்த போதிலும் எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை. இதையடுத்து சென்னையில் வெள்ளிக்கிழமை சமரசப் பேச்சுவார்த்தை தொடரும் என மத்திய தொழிலாளர் நல ஆணையர் தெரிவித்தார். 
 
மின் உற்பத்தில் பாதிப்பில்லை 
 
                   ""சுரங்கங்களில் இருந்து அனல்மின் நிலையங்களுக்கு வழங்கப்படும் 30 ஆயிரம் டன் பழுப்பு நிலக்கரி வழக்கம்போல் தடையின்றி அனுப்பப்படுகிறது. அனல்மின் நிலையங்களில் வழக்கம் போல் மின்னுற்பத்தி நடைபெறுகிறது. என்.எல்.சி.யின் 3 அனல்மின் நிலையங்களில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு 2490 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது. இதில் தற்போது 2200 மெகாவாட்டுக்கு குறையாமல் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது. 5 நாள்களுக்குத் தேவையான  பழுப்பு நிலக்கரி கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இதைக்கொண்டு அனல்மின் நிலையங்களில் தடையின்றி மின்சார உற்பத்தி செய்ய முடியும்'' என என்.எல்.சி. நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior