உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 02, 2010

கடலூர் மாவட்டத்தில் கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில் கூரை வீடுகளைக் கணக்கெடுத்த ஆவணங்களை 15-ம் தேதி வரை அளிக்கலாம்

கடலூர்:

            கடலூர் மாவட்டத்தில் கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில் கூரை வீடுகளைக் கணக்கெடுத்ததில், ஆவணங்களை அளிக்காதவர்கள் அவற்றை அளிக்க 15-ம் தேதி வரை காலஅவகாசம் நீடிக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்தார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

              கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் நிரந்த வீடுகள் கட்டுவதற்காக, கணக்கெடுப்புக்குழு மூலம் 2,10,291 கூரை வீடுகள் கணக்கெடுப்பு செய்து முடிக்கப்பட்டு உள்ளது. அனைத்து விவரங்களும் இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. கணக்கெடுப்பின்போது தாற்காலிகமாக வெளியூர் சென்றவர்கள், காலநிலைக்கு ஏற்ப வெளியூர்களுக்கு இடம் பெயர்ந்தவர்கள் பற்றிய விவரங்கள் கிடைக்காமல், கணக்கெடுப்புப் படிவத்தில் வீடு பூட்டப்பட்டு இருந்தது என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இத்தகைய குடியிருப்பு வாசிகள், தங்கள் வீடுகள் பற்றிய விவரங்களை படிவத்தில் சேர்க்கத் தேவையான ஆவணங்களை சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர், அல்லது வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அளிக்க கால அவகாசம் 15-7-2010 வரை நீடிக்கப்பட்டு உள்ளது.

                 எனவே கணக்கெடுப்பின்போது தகவல்களை அளிக்காதவர்கள். தகவல்கள் படிவத்தில் இடம்பெறச் செய்ய, சம்பந்தப்பட்ட ஆவணங்களை 15-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும். அதன்பிறகு அளிக்கப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. கலைஞர் வீட்டுவசதித் திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் தலைமையில் புதன்கிழமை நடந்தது. சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior