உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 02, 2010

நெய்வேலி என்எல்சி யில் 90 சதவீத தொழிலாளர்கள் பங்கேற்பு

நெய்வேலி:

             என்எல்சி தொழிலாளர்களின் ஊதியமாற்று ஒப்பந்தத்துக்கான நிலுவைத் தொகைகளை 01-01-2007 முதல் வழங்க வலியுறுத்தி என்எல்சி தொழிலாளர்கள் ஜூன் 30 இரவுப் பணிமுதல் மேற்கொண்ட காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் 90 சதவீத தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

             என்எல்சியின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் புதன்கிழமை இரவு (ஜூன் 30) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன. இந்நிலையில் சிறப்பு சுரங்க இயந்திரங்களை இயக்கும் தொழிலாளர்கள் அன்று இரவு பணிக்குச் சென்றனர். ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணிக்குச் சென்றனர். ஆனால் நிரந்தரத் தொழிலாளர்களில் 90 சதவீதம் பேர் பணிக்குச் செல்லவில்லை.

               புதன்கிழமை இரவு, முதல் சுரங்க வாயிலில் நின்றுகொண்டிருந்த தொழிற்சங்க 2-ம் நிலை நிர்வாகிகள், ஒருசில தொழிலாளர்கள் பணிக்குச் சென்றபோது  அவர்களிடம் வேலைநிறுத்துக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டனர். அப்போது சிறு சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸôர் அனைவரையும் கலைந்து போகச் செய்தனர். இந்நிலையில் வியாழக்கிழமை 2-ம் சுரங்கத்தில் முதலாம் பணிக்கு சென்ற ஒப்பந்தத் தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதுபோன்று 2-ம் அனல்மின் நிலையத்தில் ஒரு பிரிவினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். 

              இருப்பினும் ஒப்பந்தத் தொழிலாளர்களில் சிலர் பணிக்குச் சென்றனர். அலவலகத்தில் பணிபுரியும் ஆண் மற்றும் பெண் பணியாளர்களில் பெரும்பாலானோர் பணிக்குச் செல்லவில்லை. அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மட்டும் வழக்கம்போல் பணிக்குச் சென்றனர். தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னிட்டு என்எல்சி சுரங்கங்கங்கள், அனல்மின் நிலையங்கள் மற்றும் அலுவலகங்களில் போலீஸôர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் அசம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி வேலைநிறுத்தம் அமைதியாக நடைபெற்றுவருகிறது. அதே நேரத்தில் தொடர்ந்து சமரசப் பேச்சுவார்த்தையும் நடைபெறுகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior