கடலூர்:
கடலூர் புதுப்பாளையத்தில் இயங்கி வரும் தயா மன வளர்ச்சி குன்றியோர் பள்ளிக்கு கடலூர் மஞ்சக்குப்பம் பாரத ஸ்டேட் வங்கி வியாழக்கிழமை ரூ. 50 ஆயிரம் நிதியுதவி அளித்தது.
பாரத ஸ்டேட் வங்கி தினத்தை முன்னிட்டு இந்த உதவித் தொகை வழங்கப்பட்டது. உதவித் தொகையை மஞ்சக்குப்பம் பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் கோவிந்தராஜ் வழங்கினார். தயா மன வளர்ச்சி குன்றியோர் பள்ளிக்குத் தேவையான இருக்கைகள் உள்ளிட்டவை வாங்க இத்தொகை பயன்படுத்தப்படும் என்றார் கோவிந்தராஜ். கடந்த 3 ஆண்டுகளில் கடலூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிகள் மூலம் சமூகப் பணிகளுக்காக ரூ. 3 லட்சம் வழங்கப்பட்டு இருப்பதாகவும், அண்மையில் கடலூரில் நடந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்துக்காக 50 பேருக்கு ரூ. 5 ஆயிரத்தில் பரிசுப் பொருள்கள் வழங்கியதாகவும் கோவிந்தராஜ் தெரிவித்தார்.
வங்கியில் தற்போது 15 ஆயிரம் ஓய்வூதியர்களுக்கான கணக்குகள், 8 ஆயிரம் அரசு ஊழியர்களின் சம்பளக் கணக்குகள், மற்ற கணக்குகள் 20 ஆயிரம் உள்ளதாகவும் அவர் கூறினார். இதனால் மாதத்தின் முதல் 3 தேதிகளில் வங்கியில் கூட்டம் நிரம்பி வழிகிறது. நிதி அளிக்கும் நிகழ்ச்சியில் தயா மன வளர்ச்சி குன்றியோர் பள்ளி நிர்வாகிகள் ஜி.எஸ்.சந்தரம், ஆர்.கணபதி, மகாவீர்மல் மேத்தா, ரங்கராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக