உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 02, 2010

விருத்தாசலத்தை அச்சுறுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள்: தடை வருமா?


விருத்தாசலம் பஸ் நிலைய பின்புறத்தில் உள்ள சாக்கடை கால்வாயில் தேங்கிக்கிடக்கும் பிளாஸ்ட்டிக் பொருட்கள்.
 
விருத்தாசலம்:

           விருத்தாசலத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் புழக்கம் அதிகரித்து சுற்றுச்சூழல் மாசடைந்து வருகிறது. விருத்தாசலத்தில் சில வார்டுகளில் சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதில் வெளியேற்றப்படும் கழிவுநீர் மணிமுத்தாற்றில் கலக்கின்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

                இந்த சாக்கடையில் பெருமளவில் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் கொட்டப்படுகின்றன. நாகரீகம் எனக் கருதி திருமண நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டப்பாக்கள் பயன்பாட்டிற்குப் பிறகு கால்வாய்களில்தான் கொட்டப்பட்டுகின்றன. இதேபோல் மதுபானக் கடைகள், தேநீர் கடைகள் போன்றவைகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கப்புகள், மருத்துவமனைக் கழிவுகள், பிளாஸ்டிக் பைகள் போன்றவைகளும் கடைசியில் சாக்கடைகளில் தஞ்சமடைகின்றன. இந்த நிலை காரணமாக மணிமுத்தாறும் சாக்கடை போல மாசடைகிறது. பிளாஸ்டிக் பொருட்களின் தேக்கத்தால் சாக்கடைத் தண்ணீர் அடைபட்டு நகர்புறங்களில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் உண்டாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

              நெய்வேலி நகரியப் பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதித்திருப்பது போல விருத்தாசலத்திலும் தடைவிதிக்க வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.  இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலரான ஓவியர் தமிழரசன் கூறியது: ஊரின் மையப் பகுதியில் உள்ள மணிமுத்தாறு கூவம் நதி போல் ஆகிவிட்டது. கொட்டப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணில் புதைகின்ற போது மழை காலங்களில், மண் நீரை உறிஞ்சுவது தடைபடுகிறது என்றார். எனவே விருத்தாசலம் நகராட்சி நிர்வாகம் மணிமுத்தாறு மற்றும் பல்வேறு சாக்கடைகளில் புதைந்துகிடக்கும் பிளாஸ்டிக் பொருள்களை உடனடியாக அகற்றி, பிளாஸ்டிக் உபகரணங்களுக்கு தடைவிதித்து, பிளாஸ்டிக் இல்லாத முன்மாதிரி நகராட்சியாக விருத்தாசலத்தை மாற்றினால் மட்டுமே சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior