உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 23, 2009

வடலூர் திமுக வேலைவாய்ப்பு முகாமில் 19 ஆயிரம் பேருக்கு வேலை

நெய்வேலி, நவ. 22:

திமுக சார்பில் வடலூரில் நடைபெற்ற 3 நாள் வேலைவாய்ப்பு முகாமில் 19 ஆயிரத்து 98 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டிருப்பதாக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.

கடலூர் மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் முகமாக திமுக சார்பில் 3 நாள் வேலைவாய்ப்பு முகாம் வடலூர் வள்ளலார் குருகுலம் பள்ளியில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது. இம்முகாம் குறித்து கனிமொழி கூறியது: மாவட்டத்தில் 16 மையங்களில் இருந்து 54 ஆயிரம் பேரிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கடந்த 3 நாள்களில் 36 ஆயிரத்து 349 பேர் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டனர். முதல் பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வில் 10 ஆயிரத்து 887 பேர் பங்கேற்றதில் 2271 பேருக்கு உடனடி நியமன ஆணையும், 3 ஆயிரத்து 959 பேருக்கு எழுத்துத் தேர்வும் நடைபெற்றுள்ளது. இரண்டாம் நாள் நடைபெற்ற டிப்ளமோ மற்றும் தொழிற்பயிற்சி முடித்தவர்களுக்கான நேர்முகத் தேர்வில் 9 ஆயிரத்து 943 பேர் பங்கேற்றதில் 5 ஆயிரத்து 772 பேருக்கு பணி நியமன ஆணையும், 2 ஆயிரத்து 209 பேருக்கு எழுத்துத் தேர்வு நடைபெற்றது. மூன்றாம் நாளில் 12 மற்றும் 10 வகுப்பு முடித்தவர்களுக்கான நேர்முகத் தேர்வில் 16 ஆயிரத்து 119 பேர் பங்கேற்றதில் 11 ஆயிரத்து 55 பேருக்கு பணி நியமன ஆணையும், 1849 பேருக்கு எழுத்துத் தேர்வு நடைபெற்றுள்ளது. இதுவரை திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம் மூலம் 73 ஆயிரம் பேருக்கு தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் தான் அதிகப்படியாக 19 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை உடனடியாக வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது என்றார் கனிமொழி.வேலைவாய்ப்பு முகாமுக்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு மற்றும் வேலைவாய்ப்பு முகாம் ஒருங்கிணைப்பாளர் போஸ்கோ ஆகியோர் முன்னின்று நடத்தினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior