உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 23, 2009

ஊர் குளத்தில் புகுந்த முதலை பிடிபட்டது

சிதம்பரம், நவ. 22:

சிதம்பரம் அருகே உள்ள துரைப்பாடி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஒரு முதலை பிடிபட்டது. சிதம்பரம் அருகே உள்ள துரைப்பாடி கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் குளத்தில் முதலை ஒன்று புகுந்தது. இதனால் ஊர்மக்கள் குளத்திற்கு செல்ல முடியாமல் அவதியுற்றனர். பின்னர் தீயணைப்புத்துறை மூலம் குளத்தில் உள்ள நீரை ஞாயிற்றுக்கிழமை வெளியேற்றினர். அப்போது குளத்திலிருந்து வெளியேறிய 10 அடி நீளம், 500 கிலோ எடை கொண்ட முதலையை ஊர் மக்கள் பிடித்து கட்டி வைத்து சிதம்பரம் வனத்துறை அதிகாரி வி.விஜயனிடம் ஒப்படைத்தனர். அந்த முதலை வண்டலூர் மிருகக்காட்சி சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுவரை இந்த வாரத்தில் சிதம்பரம் பகுதியில் இளநாங்கூர், வேளக்குடி ஆகிய இடங்களில் 2 முதலைகள் பிடிக்கப்பட்டுள்ளன. முதலை கடித்து வேளக்குடியைச் சேர்ந்த சாவித்திரி (45) என்ற பெண்மணி கடந்த வியாழக்கிழமை இறந்தார். தற்போது மூன்றாவதாக துரைப்பாடி கிராமத்தில் 10அடி நீள முதலை பிடிக்கப்பட்டுள்ளது. முதலைகள் அட்டகாசத்தினால் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் வசிக்கும் மக்கள் நீர் நிலைகளில் குளிக்கவோ, மாடுகளை குளிப்பாட்டவோ முடியாமல் அச்சத்தில் உள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior