கட லூர். நவ.21:
ஆண்டுதோறும் வீராணம் ஏரிக்கு வரும் நீர் வீணாக்கப்படுகிறது. வீணாகும் நீரைச் சேமித்து விவசாயத்துக்குப் பயன்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள்: வீராணம் ஏரிக்கு வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் காவிரியில் இருந்து தண்ணீர் நிறுத்தப்பட்டாலும், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து 15 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர் கிடைக்கிறது. ஆனால் இந்த நீரைச் சேமிக்க முடியாத நிலை இருக்கிறது. ரூ.110 கோடி செலவில் வீராணம் ஏரியின் உயரத்தை 47.5 அடியாக உயர்த்திய போதிலும், வடகிழக்குப் பருவமழை காலத்தில் 44 அடிக்கு மேல் நீரைத் தேக்குவது இல்லை. வீராணத்தில் இருந்து தண்ணீர் பெறும் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டின் உயரம் 7.5 அடியாக இருந்தும் 4 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் தேக்குவது இல்லை. இதனால் ஆண்டுதோறும் 12 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்குத் தண்ணீர் கிடைப்பது அரிதாகி விட்டது. புதிய வீராணம் திட்டத்தில் ரூ.40 கோடி செலவிடப்படாமல் இருப்பதாகக் கூறுகிறார்கள். அதில் வீராணம் வடக்கு வடிகால் மதகைச் சீரமைக்க ரூ.10 கோடியில் தயாரிக்கப்பட்ட திட்டம் என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. அந்த மதகைச் சீரமைக்காததால், ஆண்டுதோறும் வடக்கு வடிகால் மதகுப் பகுதியில், தண்ணீர் வெளியேறாமல் இருக்க ரூ.2 லட்சம் செலவிட்டு மணல் மூட்டை அடுக்குவதும், வீராணம் நீர்மட்டம் உயர்ந்ததும், அவசரமாகத் தண்ணீரைத் திறந்துவிட, மணல் மூட்டைகளை அகற்றுவதுமாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் செயல்படுகிறார்கள்.
இதேபோல் கடலூர், நாகை மாவட்டங்களின் டெல்டா பகுதிகளுக்கு காவிரி நீர் வழங்கும் கொள்ளிடம் கீழணையில் இருந்து அதிகபட்சம் பாசனத்துக்கு 4300 கனஅடி நீர்தான் எடுக்க முடியும். ஆனால் ஆண்டுதோறும் சுமார் 100 டிஎம்.சி. நீர் கடலில் கலந்து வீணாகிக் கொண்டு இருக்கிறது. தண்ணீரைச் சேமித்து பாசன வசதியைப் பெருக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார் சேத்தியத்தோப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் விஜயகுமார். பாசமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன்: சிதம்பரம் புறவழிச் சாலையில் போதிய பாலங்கள் கட்டாததால் 15 சதுர கி.மீ. பரப்பளவில் வீராணம் உபரி நீர் தேங்கி வடியாமல் விளை நிலங்களில் தேங்கி, சம்பா நெல் பயிர்களைப் பாதிக்கிறது. மேலும் ஒரே பாலத்தின் வழியாக அதிக தண்ணீர் வழிந்தோடி பாசிமுத்தான் ஓடையின் கரைகளை உடைத்து விளை நிலங்களைச் சேதப்படுத்துகிறது. சிதம்பரம் நகரக் கழிவுகள் பாசன வாய்க்காலான கான்சாகிப் வாய்க்காலில் கலப்பதைத் தடுக்க வேண்டும். விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ரவீந்திரன்: 5 மாவட்டங்களில் பெய்யும் கனமழையில் இருந்து கிடைக்கும் உபரிநீர் முழுவதும் கடலூர் மாவட்டம் வழியாக ஓடி, கடலில் வீணாகக் கலக்கிறது. கடலூர் மாவட்டத்தில் வெள்ளச் சேதங்களையும் ஏற்படுத்துகிறது. ஏரிகள் குளங்கள் மராமத்து சரியாக நடக்கவில்லை. உபரி நீரைச் சேமித்து விவசாயத்துக்குப் பயன்படுத்தும் ஒருங்கிணைந்த திட்டம் வேண்டும். வெலிங்டன் ஏரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பெண்ணாடம் சோமசுந்தரம்: திட்டக்குடி தாலுகாவில் நிலங்களை அளந்து பட்டா வழங்குவது, நிலம் விற்பனை செய்யப்பட்டதும் பெயர் மாற்றம் செய்வது உள்ளிட்ட பணிகள் முறையாக நடக்க வில்லை. 400க்கும் மேற்பட்ட மனுக்கள் நிலுவையில் உள்ளன. 6-வது மாதம் அளிக்கப்பட்ட மனுவுக்கு இதுவரை நடவடிக்கை இல்லை. ஆனால் அண்மையில் அளித்த மனுமீது நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள். இதற்காக ரூ.4 ஆயிரம் வரை லஞ்சம் பெறப்படுகிறது. கூட்டத்தில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பட்டாம்பாக்கம் வெங்கடபதி, பகண்டை அருணாச்சலம், கே.கோதண்டராமன், கார்மாங்குடி வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளைத் தெரிவித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், வேளாண் இணை இயக்குநர் பாபு, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மணி உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக