கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட சொத்துப் பத்திரங்களுக்கானப் பாக்கித் தொகையை செலுத்தி, பத்திரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் சனிக்கிழமை அறிவித்தார். அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திண்டிவனம் ஆகிய சார் பதிவாளர் அலுவலகங்களில் குறைவு முத்திரைச் சட்ட வருவாய் திட்டத்தின் கீழ் அரசுக்கு செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ள பாக்கிதாரர் விவரப்பட்டியல் தயார் செய்யப்பட்டு உள்ளது, இந்த விவரங்கள் தேசிய தகவல் மைய இணைய தளத்தில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கான பகுதியில் வெளியிடப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட பாக்கிதாரர்கள், இந்த சேவையைப் பயன்படுத்தி, தங்கள் சொத்துக்குச் செலுத்த வேண்டிய குறைவு முத்திரைக் கட்டணத் தொகையை தெரிந்து கொண்டு, 30-ம் தேதிக்குள் பாக்கித் தொகையை செலுத்தி தங்கள் பத்திரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக