கடலூர், நவ.21:
குறிஞ்சிப்பாடியில் ரூ. 5 கோடியில் அமைக்கப்பட்டு இருக்கும் துணை மின் நிலையத்தை மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கிறார். அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குறிசிப்பாடியில் ரூ. 5.17 கோடியில் 110 கிலோ வாட் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா காலை 10-30 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை வகிக்கிறார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மக்களவை உறுப்பினர் கே.எஸ்.அழகிரி, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். குறிஞ்சிப்பாடி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு தகவல் மையத்தையும் கனிமொழி திறந்து வைக்கிறார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக