பண்ருட்டி, நவ.21:
கனமழை காரணமாக பண்ருட்டி வட்டப் பகுதியில் பயிரிட்டிருந்த காய்கறி தோட்டங்கள் சேதம் அடைந்து உற்பத்தி குறைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பண்ருட்டி வட்டம் பண்ருட்டி மற்றும் அண்ணாகிராமம் ஒன்றியத்தை சேர்ந்த கட்டமுத்துப்பாளையம், ராசாப்பாளையம், கண்டரக்கோட்டை, சாத்திப்பட்டு, பெரியகாட்டுப்பாளையம், விசூர், கருக்கை, மேலிருப்பு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 100-ம் மேற்பட்ட ஏக்கர் நிலப் பரப்பில் கத்திரிக்காய், வெண்டை, பாகல், முருங்கை, புடலை, பீர்கண், கொத்தவரை, முள்ளங்கி, அவரை உள்ளிட்ட காய்கறிகள் விளைவிக்கப்படுகிறது. இந்த காய்கறிகளை பண்ருட்டி ரத்தினம்பிள்ளை மார்கெட்டில் உள்ள வியாபாரிகள் வாங்கி கடலூர், சிதம்பரம், நெய்வேலி, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள வியாபாரிகளுக்கு விற்பனை செய்வர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையால் காய்கறித் தோட்டத்தில் தண்ணீர் தேங்கி நின்றதால் செடிகள் அழுகின. மேலும் மழையின் காரணமாக செடிகளில் இருந்த பூ மற்றும் பிஞ்சுகள் அழுகி உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் பண்ருட்டி ரத்தினம்பிள்ளை மார்கெட்டுóக்கு உள்ளூர் காய்கறி வரத்து குறைந்துள்ளது. மேலும் வெளியூர்களில் இருந்து வரும் கேரட், கோஸ், பீன்ஸ், செüசெü உள்ளிட்ட காய்கறிகளின் வரத்தும் மழையால் குறைந்துள்ளதால் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில் மேலும் இருநாட்கள் மழை பெய்யும் போது எஞ்சியுள்ள காய்கறி செடிகள் பாதிப்படையக் கூடும் என விவசாயிகள் வேதனையுடன் கூறினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக