உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 23, 2009

4 தினங்​க​ளுக்கு பின் சடலத்தை பெற்ற உற​வி​னர்கள்

நெய்வேலி, நவ. 22:​

என்​எல்சி சுரங்​கத்​தில் மார​டைப்பு கார​ண​மாக வியா​ழக்​கி​ழமை இறந்த ஒப்​பந்​தத் தொழி​லா​ளி​யின் சட​லத்தை உற​வி​னர்​கள் ஞாயிற்​றுக்​கி​ழமை பெற்​றுச்​சென்​ற​னர்.​ ​

என்​எல்சி முதல் சுரங்​கத்​தில் ஒப்​பந்​தத் தொழி​லா​ளி​யாக பணி​பு​ரிந்​த​வர் பழ​னி​வேல்​(47). இவர் கடந்த வியா​ழக்​கி​ழமை வழக்​கம்​போல் பணிக்கு வந்​துள்​ளார். அப்​போது பணி​யி​டத்​தில் நெஞ்​சுவலி ஏற்​பட்​ட​தா​கக் கூறி​யி​ருக்​கி​றார். உட​னி​ருந்த சக தொழி​லா​ளர்​கள் பழ​னி​வே​லுவை என்​எல்சி மருத்​து​வ​ம​னைக்கு கொண்டு சென்​ற​னர்.​ ​ பழ​னி​வே​லுவை பரி​சோ​தித்த டாக்​டர்​கள்,​ அவர் இறந்​து​விட்​ட​தா​கக் தெரி​வித்​துள்​ள​னர். இதை​ய​டுத்து சில தொழிற்​சங்க நிர்​வா​கி​க​ளும்,​ பழ​னி​வே​லு​வின் உற​வி​னர்​க​ளும்,​ பழ​னி​வே​லு​வின் குடும்​பத்​தில் ஒரு​வ​ருக்கு நிரந்​தர வேலை​யும்,​ ரூ.5 லட்​சம் இழப்​பீட்​டுத் தொகை​யும் கோரி​ய​தா​கத் தெரி​கி​றது.​ ​ ​ இதற்கு நிர்​வா​கம் ஒப்​புக்​கொள்ள மறுத்து,​ பழ​னி​வே​லு​வின் குடும்​பத்​துக்கு சட்ட ரீதி​யாக கிடைக்க வேண்​டிய சலு​கை​களை வழங்க முன்​வந்​தது. இதை தொழிற்​சங்க நிர்​வா​கத்​தி​னர் ஏற்​றுக்​கொண்​ட​னர். இருப்​பி​னும் பழ​னி​வே​லு​வின் உற​வி​னர்​கள் நிர்​வா​கத்​தின் உறு​தியை ஏற்க மறுத்து சட​லத்​தை​யும் வாங்க மறுத்​த​னர். இத​னால் கடந்த 4 தினங்​க​ளாக பழ​னி​வே​லு​வின் உடல் என்​எல்சி மருத்​து​வ​ம​னை​யின் பிண​வ​றை​யில் வைக்​கப்​பட்​டி​ருந்​தது.​ ​ இந்​நி​லை​யில் பாமக தொழிற்​சங்க செய​லர் தில​கர் தலை​யிட்டு,​ பழ​னி​வே​லு​வின் குடும்​பத்​தி​ன​ரி​டம் சம​ர​சப் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். இப்​பேச்​சின் முடி​வில் பழ​னி​வே​லு​வின் குடும்​பத்​தில் ஒரு​வ​ருக்கு ஒப்​பந்த அடிப்​ப​டை​யில் வேலை​யும்,​ ஒப்​பந்​த​தா​ரர் மூலம் ரூ.25 ஆயி​ரம் வழங்க நட​வ​டிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ள​தாக தில​கர் கூறி​ய​தை​ய​டுத்து பழ​னி​வே​லு​வின் உற​வி​னர்​கள் சட​லத்​தைப் பெற ஒப்​புக்​கொண்​ட​தா​கக் கூறப்​ப​டு​கி​றது.​ ​ இதை​ய​டுத்து பழ​னி​வே​லு​வின் உடல் பிரேத பரி​சோ​த​னைக்​காக பண்​ருட்டி அரசு மருத்​து​வ​ம​னைக்கு கொண்டு செல்​லப்​பட்டு பின்​னர் உற​வி​னர்​க​ளி​டம் ஒப்​ப​டைக்​கப்​பட்​டது. பழ​னி​வே​லு​வின் இறப்பு குறித்து நெய்வேலி தெர்​மல் போலீ​சார் வழக்​குப் பதி​வு​செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்​ற​னர்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior