நெல்லிக்குப்பம் பாரி சக்கரை ஆலை முன் நவம்பர் 30-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் ஈஐடி பாரி சர்க்கரை ஆலை மட்ட சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருவந்திபுரம் தொட்டி ஊராட்சி மன்றத் துணை தலைவர் என்.ஆறுமுகம் தலைமை தாங்கினார். கரும்பு பிழிதிறன் 9.5 என்று இருப்பதை மாற்றி 8.5 சதம் என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும். கரும்பு விலையை டன் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் என நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கோரி 30.11.2009-ல் நெல்லிக்குப்பம் சக்கரை ஆலை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது. டிசம்பர் 9-ம் தேதி மதுரையில் நடைபெறும் மாநில மாநாட்டில் கலந்துக்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக