சிதம் பரம், நவ. 22:
தமிழக முதல்வரின் துணைவியார் ராசாத்தி அம்மாள் மற்றும் கனிமொழி எம்பி மகனும், முதல்வரின் பேரனுமான ஆதித்யன் ஆகியோர் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வழிபட்டனர். ஆலய செயல்அலுவலர் கே.சிவக்குமார், திமுக நகரச் செயலாளர் கே.ஆர்.செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.திருநாவுக்கரசு, இளைஞரணி துணை அமைப்பாளர் ஜேம்ஸ்விஜயராகவன், நகர மாணவரணி அமைப்பாளர் அப்புசந்திரசேகரன், பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலாளர் முத்துபெருமாள் ஆகியோர் சால்வை கொடுத்து வரவேற்று கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர். பின்னர் ராசாத்தி அம்மாள், ஆதித்யன் ஆகியோர் கோயிலுக்குள் சென்று சிற்றம்பலமேடை மீது ஏறி சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு ஆலய பொது தீட்சிதர்கள் சிறப்பு அர்ச்சனை மற்றும் ஆராதனை செய்து பிரசாதத்தை வழங்கினர். பின்னர் ஆலய வளாகத்தில் உள்ள தில்லைகோவிந்தராஜப் பெருமாள் ஆலயம், சரபேஸ்வரர் சன்னதி, ஊர்த்துவதாண்டவர் சன்னதி, ஆதிமூலநாதர் சன்னதி, சிவகாமிஅம்மன் ஆலயம் ஆகியவற்றுக்கும் சென்று தரிசனம் செய்தனர். முன்னதாக நகரின் எல்லையில் உள்ள தில்லைக்காளியம்மன் கோயிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் வடலூரில் நடைபெற்று வரும் வேலைவாய்ப்பு முகாமுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக