உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 24, 2009

கடலூரில் கைத்தறி கண்காட்சி ரூ.15 லட்சம் இலக்கு: கலெக்டர்

கடலூர் :

                 கடலூரில் துவங்கப் பட்டுள்ள கைத்தறி கண் காட்சியில் 15 லட்ச ரூபாய் வரை விற்பனையாகும் என இலக்கு நிர்ணயித் துள்ளதாக கலெக்டர் பேசினார்.கடலூர் லாரன்ஸ் ரோட்டில் உள்ள பிரியங்கா ஹாலில் மாவட்ட அளவிலான கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை வரும் 6ம் தேதிவரை நடக்கிறது. கண்காட்சி துவக்க விழா நேற்று காலை நடந்தது.  டி.ஆர்.ஓ., நடராஜன் முன்னிலை வகித்தார்.

                   கலெக்டர் சீத்தாராமன் கண்காட்சியை துவக்கி வைத்து பேசுகையில்,இந்த கண்காட்சியில் விற் பனைக்காக கோவை, மதுரை, சேலம், காஞ்சிபுரம் போன்ற ஊர்களில் பிரத்யேகமாக வடிவமைக் கப்பட்ட பட்டு மற்றும் பருத்தி ரக சேலைகள், குளிர்கால தேவைக்கேற்ற ஈரோடு, சென்னிமலை, கரூர் ஸ்பெஷல் ரக போர்வைகள், படுக்கை விரிப்புகள், கலர் துண்டுகள், தலையணை உறைகள், குறிஞ்சிப்பாடி, நடுவீரப்பட்டு, புவனகிரி கைலிகள், கொசு வலைகள், ஆண்களுக்கான ரெடிமேட் சர்ட்டுகள், பெண்களுக்கான சுடிதார் மெட்டீரியல்ஸ், நைட்டீஸ் மற்றும் அனைத்து ரக கைத்தறி ரகங்களும் இடம் பெற்றுள்ளன.அனைத்து கைத்தறி ரகங்களுக்கும் அரசு தள்ளுபடி 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வழங்குகிறது. இக்கண்காட்சியின் மூலம் 15 லட்ச ரூபாய் வரை விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கைத்தறித் தொழிலை பாதுகாக்கவும், ஏழை நெசவாளர்களின் நலன் காத்திடவும் கைத் தறி ஆடைகளை வாங்கி பயன்பெற வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior