உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 24, 2009

ஓராண்டில் 1,808 கோடி யூனிட் மின் உற்பத்தி : என்.எல்.சி., புதிய சாதனை


நெய்வேலி :

                  என்.எல்.சி., சேர்மனாக அன்சாரி பொறுப்பேற்ற ஓராண்டில் மின் உற்பத்தியில் சாதனை படைத்துள்ளது.என்.எல்.சி., சேர்மனாக கடந்தாண்டு டிச., 17ம் தேதி அன்சாரி பொறுப்பேற்றார். அப் போது கனமழை, சுரங்கம் வெட்ட நிலம் கிடைக்காத காரணங்களால் நிறுவனம் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து, இலக்கை எட்ட முடியாத நிலை இருந்தது.

        அன்சாரியின் தீவிர முயற்சி மற்றும் பணியாளர்களின் கடின உழைப்பால் கடந்த ஓராண்டில் 15.765 கோடி கன மீட்டர் மேல் மண்ணை நீக்கியும்,  234.80 லட்சம் டன் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுத்தும், 1,808.60 கோடி யூனிட் மின் உற்பத்தி செய்து புதிய சாதனை படைக் கப்பட்டுள்ளது.புதிய திட்டங்களை நிறைவு செய்த வகையில் 2009ம் ஆண்டில் ராஜஸ் தான் மாநிலம், பர்சிங்கர் பகுதியில் இந்நிறுவனம் அமைத்துள்ள திறந்தவெளி சுரங்கத்தில் பழுப்பு நிலக்கரி உற்பத்தி துவங்கியுள்ளது. மேலும், அனல்மின் உற்பத்தி நிலையத்தின் முதல் பிரிவில் இந் தாண்டு மின்உற்பத்தி துவங்கி மின் தொகுப்புடன் இணைக்கப்பட்டது.இதுவரையில் பழுப்பு நிலக்கரியை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்து வந்த என்.எல்.சி., நிறுவனம்,  தனது செயல் பாட்டை விரிவுபடுத்தும் நோக்கில், தற்போது தூத்துக்குடியில் நிலக்கரி மூலம் இயங்கும் அனல்மின் நிலையத்தை தமிழக மின்வாரியத்துடன் இணைந்து அமைத்து வருகிறது.

                மேலும், காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் துறையிலும் ஈடுபடவுள்ளது. புதுப்பிக்கவல்ல எரிசக்தி துறைகளான புனல் மின்சக்தி மற்றும் சூரியஒளி மூலம் மின்சக்தி உற்பத்தி  துறைகளிலும் கால்பதிக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் வரும் ஆண்டுகளில் மேலும் சிறப்பாக அமைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்த சாதனை படைக்க கடினமாக உழைத்த அதிகாரிகள், பொறியாளர்கள், தொழிலாளர்கள், தொழிற்சங்கத்தினர் என அனைவருக்கும் அன்சாரி, நன்றி தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior