ஸ்ரீமுஷ்ணம் :
ஸ்ரீமுஷ்ணத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப் படும் என மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கூறினார். ஸ்ரீமுஷ்ணத்தில் கடந்த 65 ஆண்டுகளாக தனியாருக்கு சொந்தமான கட்டடத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயகரமான நிலையில் இயங் கும் இப்பள்ளி குறித்த செய்தி தினமலர் நாளிதழில் வெளிவந்தது.இந்நிலையில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் விஜயா, ஸ்ரீமுஷ் ணம் ஒன்றிய நடுநிலைப் பள்ளியை நேற்று முன்தினம் ஆய்வு செய்து, ஆசிரியர்களிடம் விபரங்களை கேட்டறிந்தார். இதன் பின்னர் அவர் நிருபரிடம் கூறுகையில், பள்ளியை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற கல்வித்துறை தயாராக உள்ளது. மேலும் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட இப்பகுதி முக்கியப் பிரமுகர்கள் இடம் தேர்வு செய்து கொடுத்தால் உடனடியாக புதிய பள்ளிக் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக