கடலூர் :
மாவட்டத்தில் உள்ள 18 மண்ணெண்ணெய் முகவர்களுடன் நுகர்பொருள் வாணிபக்கழக துணை ஆணையர் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். கடலூர் மாவட்டத்தில் பொது வினியோகத்திட்டத்தில் 2 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது.இதில் சிதம்பரம், கடலூர், பெண்ணாடம், திட்டக்குடி, விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி உள்ளிட்ட 18 இடங்களில் சேமிப்பு கிடங்குகள் உள்ளன. இதன் மூலம் 18 லட்சம் லிட்டர் மாதம் தோறும் வினியோகம் செய்யப்படுகிறது.
சென்னையில் உள்ள அரசு ஆயில் கார்ப்ரேஷன் மூலம் வழங்கப்படும் மண் ணெண்ணெய் முறையாகவும், குறிப் பிட்ட காலத்தில், அளவு குறையாமல் கொண்டுவரவும், வினியோகத்தை முறைப்படுத்தவும் டீலர்கள் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.இதில் மாவட்டத்தில் உள்ள 18 முகவர்களுடன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக துணை ஆணையர் முரளிதரன் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடி, வினியோகத்தை முறைப் படுத்த ஆலோசனை வழங்கினார்.இதில் டீலர்களுக்கு மண்ணெண் ணெய் வந்து இறங்கியதும், சென்னை அலுவலகத்திற்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கவும், பொதுமக்களை பாதிக்காத வகையில் மண்ணெண்ணெய் வினியோகிக்க அறிவுறுத்தப்பட்டது.நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் தேவராஜ், வட்ட வழங்கல் அலுவலர்கள் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக