நெய்வேலி :
நெய்வேலியில் நெல்லிக்குப்பம் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., சபாராஜேந்திரனுக்கு எதிராக அமைச்சர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் திரண்டதால் பதட்டம் நிலவியது.கடலூர் மாவட்ட தி.மு.க., செயலாளரான அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதே கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.,க் களான நெல்லிக்குப்பம் சபா ராஜேந்திரன், கடலூர் அய்யப்பன் தனியாக செயல்பட்டு வருகின்றனர்.
நெய்வேலி நகர முன்னாள் தி.மு.க., செயலாளர் நாகலிங்கத்தின் பிறந்த நாளையொட்டி நேற்று எம்.எல்.ஏ.,க்கள் சபா ராஜேந்திரன், அய்யப்பன் ஆகியோர் நெய்வேலி நகருக்கு வந்தனர். மேலும் சபாராஜேந்திரன் தலைமையில் ஊர்வலமாக சென்று அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவிக்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் 300 பேர் நெய்வேலி நகர செயலாளர் புகழேந்தி தலைமையில் அண்ணாதுரை சிலை அருகே திரண்டனர். கட்சி கட்டுப்பாட்டை மீறி மாவட்ட செயலாளருக்கு எதிராக செயல்படும் சபாராஜேந்திரன் அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவிக்க விடமாட்டோம் என கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவியது. இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் அண்ணாதுரை சிலைக்கு நாகலிங்கம் மாலை அணிவித்த உடன் பிரச்னை சுமூகமாக முடிந்தது.
பிரச்னைகள் தொடரும்! தொகுதி மறுசீரமைப்பில் நெல்லிக் குப்பம் சட்டசபை தொகுதி நீக்கப் பட்டுள்ளது. இதனால் சபாராஜேந்திரன் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நெய் வேலி சட்டசபை தொகுதியை குறிவைத்து வருகிறார். இதற்கு அமைச்சர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் பலத்த எதிர்ப்பை வெளிப்படையாக தெரிவித்து வருவதால், இது போன்று பல பிரச்னைகள் தொடரும் என கட்சியினர் கூறுகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக