கடலூர் :
சபரிமலை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் டாஸ்மாக் கடைகளில் வியாபாரம் "டல்' அடித்து வருகிறது.மாவட்டத்தில் 229 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் தினசரி 1.25 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகி வந்தன. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங் களாக டாஸ்மாக் விற் பனை "டல்' அடித்து வருகிறது. தற்போது ஐயப்பன் கோவில் சீசன் துவங்கியுள்ளதால், மாவட்டத் தில் ஏராளமானோர் சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்து விரதம் மேற்கொண்டுள்ளனர்.இதன் காரணமாகவே டாஸ்மாக் கடைகளில் தற்போது தினசரி வருமானம் 66 லட்சம் ரூபாயாக குறைந்துள்ளது. தமிழக அரசு பல்வேறு புதிய மதுபான வகைகளை கொள் முதல் செய்து விற்பனைக்கு கொண்டு வந்த போதிலும் வியாபாரம் சூடுபிடிக்கவில்லை. இதனால் கடைகளில் சரக்குகள் தேங்கி கிடப்பதால் கொள்முதல் செய்த சரக்குகளை முதுநகர் குடோனில் இறக்கி வைக்க முடியாமல் லாரியிலேயே நிறுத்தி வைக் கப்பட்டுள்ளன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக