கடலூர் :
குறிப்பிட்ட காலத்திற்குள் பாதாள சாக்கடை திட்டப்பணியை முடிக்கவில்லை எனில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என அ.தி.மு.க., மாவட்டச் செயலாளர் சம்பத் பேசினார். கடலூரில் மந்தமாக நடக்கும் பாதாள சாக்கடை திட்டத்தை கண்டித்து கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் உழவர் சந்தை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இளைஞரணி செயலாளர் ஆதி ராஜாராம் தலைமை தாங்கினார். நகர செயாளர் குமரன் வரவேற்றார்.
மாவட்ட செயலாளர் சம்பத் முன்னிலை வகித்து பேசியதாவது:
தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. கடலூரில் மந்தமாக நடக்கும் பாதாள சாக்கடை திட்டப் பணியால் ரோடுகள் பழுதடைந்துள்ளன. அடிக்கடி விபத்துக் கள் நடக்கிறது. கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது.
இதனால் கடலூர் மக்களுக்கு புதுப்புது நோய்கள் பரவுகின்றன. ஒரு மாதத்தில் கலெக்டர் தலைமையில் நகராட்சி, குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுடன் கூடி ஆலோசனை செய்து கடலூர் நகரில் பாதாள சாக்கடை திட் டத்தை விரைந்து முடிக்க குறிப்பிட்ட கால கெடுவை தெரிவிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் பாதாள சாக்கடை திட்டப் பணி முடிக்கவில்லை எனில் மக்களை திரட்டி கலெக்டர் அலுவலகம், நகராட்சி அலுவலகம், அமைச்சர் அலுவலகங் களை முற்றுகையிடுவோம் என்றார். ஆர்ப்பாட்டத்தில் சட்டசபை தொகுதி செயலாளர்கள் கடலூர் சுப்ரமணியன், விருத்தாசலம் அரங்கநாதன், இணை செயலாளர்கள் ராமசாமி, பாலகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன், முன்னாள் நகர செயலாளர் குமார், மாவட்ட தலைவர் அருணாசலம், ஒன்றிய செயலாளர்கள் பழனிசாமி, முத்துக்குமாரசாமி, டாக்டர் லஷ்மி நாராயணன், சக்திவேல், விவசாய அணி காசிநாதன், மீனவரணி தண்டபாணி, ஒன்றிய துணை செயலாளர் ஏழுமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக