திட்டக்குடி :
திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரிடையே மோதல் சூழ்நிலை உருவானதால் அமைதிக்குழு கூட்டம் பாதியில் நின்றது. திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவில் திருக்குளத்தை சீரமைக்க வலியுறுத்தி வரும் 24ம் தேதி கோவில் முன்பாக சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக சிவனடியார்கள் திருக்கூட்டத்தினர் அறிவித்தனர். அதனையொட்டி நேற்று காலை 11 மணிக்கு தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கண்ணன் தலைமையில் அமைதிக்குழு கூட்டம் நடந்தது. அதில் இந்துசமய அறநிலைய ஆட்சித்துறை இணை ஆணையர் ஜெகநாதன், பேரூராட்சி தலைவர் மன்னன், இந்து முன்னணி நகர தலைவர் செந்தில் மற்றும் திருக்குள ஆக்கிரமிப்பாளர்கள், சிவனடியார்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில்,திருக்குளம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதால் சுத்தம் செய்யக் கூடாது எனவும், கலந்து பேசி முடிவெடுக்க மூன்று மாதம் அவகாசம் வேண்டும் என ஒரு தரப்பினர் கூறினர். அதில் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆக்கிரமிப்பாளர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் அமைதிக்குழு கூட்டத்தை ஒத்தி வைப்பதாக தாசில்தார் அறிவித்தார். அப்போது சிவனடியார்கள் திட்டமிட்டபடி வரும் 24ம் தேதி சாகும் வரை உண்ணாவிரத போராட் டம் நடைபெறும் என அறிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக