கடலூர் :
கடலூர் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்காக விவசாயிகள் முன்வந்து நிலத்தை கொடுத்தாலும் ஏஜன்டுகள் விலையில் பாரபட்சம் காட்டி வருகின்றனர் என இந்திய கம்யூ.,கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் நல்லகண்ணு பேசினார். கடலூர் அடுத்த புதுச்சத்திரம், சாமியார் பேட்டை பகுதியில் கப்பல் கம்பெனி, பவர் கார்ப்பரேஷன் கம்பெனிகளுக்காக நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டு வருகிறது. இதில் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு நிலத்தை வாங்கி ஏமாற்றப் படுவதை கண்டித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உண் ணாவிரதம் இருந்தனர்.ஒருங்கிணைப்புக்குழு தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார், ராமலிங்கம், மாரியப்பன் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூ., விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் நாகராஜன், துணைத் தலைவர் சேகர், செயலாளர் சுப்ரமணியன், ஏஐடியுசி., மாவட்ட செயலாளர் சேகர், இந்திய.கம்யூ., மாவட்ட செயலாளர் மணிவாசகம் பங்கேற்று பேசினர்.
முன்னதாக இந்திய கம்யூ., மத்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் நல்லகண்ணு உண்ணா விரதத்தை துவக்கி வைத்து பேசியதாவது:
பரங்கிப்பேட்டை பகுதியில் பவர் கம்பெனி, கப்பல் கம்பெனிக்காக நிலம் ஆர்ஜிதம் செய்து வருகின்றனர். அந்த பகுதி விவசாயிகளும் தொழில் வளர்ச்சியை கருதி, நிலத்தை கொடுப்பதற்கு முன் வந்தனர். ஒரு கம்பெனி நேரடியாக நிலத்தை வாங்காமல், ஏஜன்டுகள் மூலம் நிலத்தை வாங்குகிறது. இதனால் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்காமல் மோசடி நடக்கிறது. ஒரே சர்வே எண் உள்ள இடத்திற்கு அண்ணனுக்கு ஏக்கர் 4 லட்சம் ரூபாய் எனவும், தம்பிக்கு 8 லட்சமும், தங்கைக்கு 13 லட்சமும் கொடுத்து வாங்குகின்றனர். ஏன் இந்த வித்தியாசம். இதனால் ஏழை விவசாயிகள் ஏமாற்றப்படுகின்றனர். ஏஜன்டுகள் நிலம் வாங்க யார் அதிகாரம் கொடுத்து. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அனைத்து கட்சியினரையும் ஒருங்கிணைந்து போராட் டம் நடத்தப்படும்.மேலும் இந்த பிரச்னையை இந்திய.கம்யூ., கட்சி சட்டமன்றத்திலும் எழுப்பவுள்ளது எனப் பேசினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக