உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 17, 2010

மின் கம்பத்தில் டிப்பர் லாரி மோதல் கடலூர் 2 மணி நேரம் இருளில் மூழ்கியது

கடலூர் : 
                         டிப்பர் லாரி மோதி மின் கம்பம் முறிந்து விழுந்ததால் கடலூர் நகரின் ஒரு பகுதியில் 2 மணி நேரம் இருளில் மூழ்கியது. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் கான்வென்ட் தெருவில் பாதாள சாக்கடைக்காக 'மேன் ஹோல்' அமைக்க சாலை நடுவில் பள்ளம் தோண்டப்பட்டது. இதனால் வாகனங்கள் சாலையோரமாக சென்று வந்தன. அவ் வழியே நேற்று இரவு 7.30 மணிக்கு டிப்பர் லாரி வந்தது. பள்ளம் தோண் டிய பகுதியில் ஒதுங்கி செல்ல முயன்றபோது மின் கம்பத்தில் லாரியின் 'கேபின்' மோதியது. அதில் மின்கம்பம் முறிந்து அந்தரத்தில் தொங்கியது. அதிர்ஷ்டவசமாக மின் கம்பிகள் அறுந்து விழாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. உடன் திருப்பாதிரிப்புலியூர் மின்வாரிய இளமின் பொறியாளர் ஸ்ரீதர் தலைமையில் ஊழியர்கள் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்தனர். இதனால் கான்வென்ட் தெரு, நவநீதம் நகர், ரங்கநாதன் நகர், விஜயலட்சுமி நகர், அக்கிள் நாயுடு தெரு, சஞ்சீவி நாயுடு தெரு, போடி செட்டித் தெரு, கம்மியம் பேட்டை, தங்கராஜ் நகர், சன்னதி தெரு, லாரன்ஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகள் இருளில் மூழ்கின. பின்னர் மின் கம்பத்திற்கு முட்டு கொடுத்து குறிப்பிட்ட பகுதியில் மட்டும் மின் இணைப்பை துண்டித்துவிட்டு பிற பகுதிகளுக்கு இரவு 9.30 மணிக்கு மின் இணைப்பு வழங்கினர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior