உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 17, 2010

திட்டக்குடி அருகே மணல் குவாரியில் கிராம மக்கள் முற்றுகையால் பரபரப்பு


திட்டக்குடி : 

                  திட்டக்குடி அருகே ஆழமாக மணல் எடுப்பதால் வெள்ள அபாயம் ஏற்படும் என மணல் குவாரியை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் கிராமத்தின் வழியாக செல்லும் வெள்ளாற்றில் அரசு மணல் குவாரி உள்ளது. இங்கு நாள் ஒன்றுக்கு 40 முதல் 50 லாரிகளில் அள வுக்கு அதிகமாக மணல் எடுத்து செல்லப்படுகிறது. மேலும் ஒரே இடத்தில் ஆழமாக மணல் அள்ளப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்ட பாதிப்பு, வெள்ள காலங்களில் கிராமத்திற்குள் வெள்ள நீர் புகுந்து சேதத்தை ஏற்படுத்தும் என கிராம மக்கள் குவாரிக்குள் நின்றிருந்த லாரிகளை மடக்கி நிறுத்தி முற்றுகையிட்டனர். தகவலறிந்த தாசில்தார் கண்ணன் நேரில் சென்று, குவாரி சூப்பர்வைசர் கார்த்திக்கிடம் விசாரணை நடத்தினார். பின்னர் ஆழமாக மணல் எடுத்த பகுதிகளில் மீண்டும் மணல் நிரப்பி, மேடாக்க வேண்டும். அதுவரை மணல் எடுக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டார். தொடர்ந்து பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளமான பகுதிகளில் மணல் நிரப்பும் பணி துவங்கியது. இதனையடுத்து லாரிகளை விடுவித்த கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

download this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior