கடலூர் :
கொசு உற்பத்தியை தடுக்க மத்திய சுகாதாரக் குழுவினர் தயாரித்துள்ள மருந்தின் தன்மையை கடலூரில் ஆய்வு செய்தனர். நாட்டில் பரவி வரும் பல்வேறு நோய்களுக்கு காரணமான கொசுக்களை ஒழிக்க மத்திய சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக கொசு உற்பத்தியின் ஆரம்ப நிலையான லார்வா பருவத்திலேயே அழிக்க புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை சுகாதாரத் துறையினர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரிட்சார்த்தமான முறையில் பரிசோதித்து வருகின்றனர். அதன்படி மத்திய சுகாதார துறை அதிகாரிகள் குழு நேற்று கடலூர் வந்தனர். இவர்கள் கடலூர் வில்வ நகர் பகுதிக்கு சென்று அங்கு தேங்கியுள்ள கழிவு நீரில் உள்ள லார்வாவை பிரித்தெடுத்து அதன் தன்மைகளை ஆய்வு செய்தனர். பின்னர் தாங்கள் கொண்டு வந்த புதிய மருந்தை தெளித்து மருந்தின் செயல்பாடு, லார்வா எத்தனை மணி நேரத்தில் இறக்கிறது என்பதை ஆய்வு செய்தனர்.
downlaod this page as pdf