கடலூர் :
மாவட்ட மருத்துவத் துறை மற்றும் நுகர்வோர் குழுக்களுடன் இணைந்து காலாண்டு நுகர்வோர் ஆலோசனைக் கூட்டம் கடலூர் அரசு மருத்துவமனையில் நடந்தது. இணை இயக்குனர் ஜெயவீரக்குமார் தலைமை தாங்கினார். கண்காணிப்பாளர் பரஞ்ஜோதி, நிலைய மருத்துவ அதிகாரி கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நுகர்வோர் கூட்டமைப்பு மாநில இணைச் செயலாளர் அன்பழகன், பொதுச் செயலாளர் மெய் யழகன், பாசமணி, அரிகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் கடலூர், பண்ருட்டி, சிதம்பரம் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் பணியில் உள்ள டாக்டர்கள், நர்சுகள் 'பேட்ஜ்' அணிய வேண்டும். மருத் துவமனைக்கு வரும் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் உள்ள நோயாளிகளின் சிரமங்ளை சரி செய்ய வெண்டும். நோயாளிகளிடம் லஞ்சம் கேட்கும் பணியாளர் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சேத்தியாதோப்பு, கிள்ளை, நல்லூர் ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்தப்பட வேண்டும். பகுதி நேரமாக உள்ள மருத்துவமனைகளை முழுநேர மருத்துவமனைகளாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
download this page as pdf