சிதம்பரம் :
நெய்வேலியில் நாளை 18ம் தேதி ஜெயலலிதா தலைமையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்க அ.தி.மு.க., வினருக்கு மேற்கு மாவட்ட செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அருண் மொழித்தேவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்
'தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் மின் வெட்டை கண்டித்து அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா தலைமையில் நாளை (18ம் தேதி) மாலை 3 மணிக்கு நெய்வேலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., சிலையை திறந்து வைக்கிறார். நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள், இளைஞரணி, மாணவரணி , எம்.ஜி.ஆர்., மன்றம், ஜெ., பேரவை, மகளிரணி, அண்ணா தொழிற்சங்கம், இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் கட்சி முன்னோடிகள், தொண்டர்கள் பொதுமக் கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்' என கேட்டுக் கொண்டுள்ளார்.
அண்ணா தொழிற் சங்கம்:
நெய்வேலியில் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. பேரவை மாநில செயலா ளர் சின்னசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். கூட்டத்தில் எம்.ஜி.ஆர்., சிலை திறப்பு விழா மற்றும் ஆர்ப்பாட்டத்தில் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் அனைவரும் குடும்பத்துடன் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.