கடலூர் :
எஸ்.எஸ்.எல்.சி., விடைத்தாள் திருத்தும் பணி கடலூர், விருத்தாசலம் மையத்தில் நேற்று முன்தினம் துவங்கியது. கடலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பொது விடைத்தாள் திருத்தும் பணி கடலூர் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி மற்றும் விருத்தாசலம் பாத்திமா மெட்ரிக்குலேஷன் பள்ளியிலும் நேற்று முன்தினம் துவங்கியது. கடலூர் மாவட்டத்தில் இருமையங்களிலும் தமிழ், ஆங்கிலம் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் தமிழ் மற்றும் ஆங்கில வழி விடைத் தாள்களும் வந்துள்ளன. விருத்தாசலம் மையத்தில் 89 ஆயிரத்து 560 விடைத் தாள்களும், கடலூரில் 96 ஆயிரத்து 936 விடைத் தாள்களும் வரும் 27ம் தேதி வரை திருத்தப்படுகிறது. கடலூரில் 43 முதன்மை தேர்வர்களும், 43 கூர்ந்தாய்வு அலுவலர்களும், 426 உதவி தேர்வர்களும் விருத்தாசலத்தில் 37 முதன்மை தேர்வாளர்கள், 37 கூர்ந்தாய்வு அலுவலர் கள், 370 உதவி தேர்வாளர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுகின்றனர். சி.இ.ஓ., அமுதவல்லி, டி.இ.ஓ.,க்கள் கிருஷ்ணமூர்த்தி, குருநாதன் ஆகியோர் மேற்பார்வையில் விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளப் பட்டது.
download this page as pdf