உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 17, 2010

ஐரோப்பா முழுவதும் விமானப் போக்குவரத்து கடும் பாதிப்பு; ஆயிரக்கணக்கான பயணிகள் அவதி


                               ஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து தீப் பிழம்புகளை கக்கி வருவதோடு, அதிலிருந்து பீச்சியடிக்கப்படும் சாம்பல் வான் மண்டலம் முழுவதும் பரவி உள்ளது. இதனால் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளிலிருந்து வந்து, செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு ஐரோப்பிய பகுதியில் விமானப் போக்குவரத்து முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து லண்டன் செல்லும் எல்லா விமானங்களும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்திலிருந்து புறப்படும் 150 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதுபோல் காட்விக் நகரிலிருந்து புறப்படும் 138 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மான்செஸ்டர், பர்மிங்ஹாம், அதுபோல் வட அயர்லாந்து பகுதியிலிந்து புறப்படும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. ஐரோப்பிய கண்டத்தின் பெரும்பாலான நாடுகளில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். புகை மண்டலத்துக்குள் விமானத்தைச் செலுத்தினால் பாதை சரியாகத் தெரியாமல் விபத்து நேரிட வாய்ப்புள்ளது. 
 
                    மேலும் புகை துகள்கள் விமானத்தின் என்ஜின் பகுதிக்குள் புகுந்துவிட்டால் பழுது ஏற்பட வாய்ப்புள்ளது என்று பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் உள்ள விமான தரைக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.1989-ம் ஆண்டு இதுபோன்று எரிமலை வெடித்தபோது அவ்வழியாக சென்ற விமானம் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக தப்பியது. சுருள் சுருளாய் திரண்டு வரும் புகை மண்டலம் பகலை இருளாக்குவது போன்று காட்சியளிக்கிறது. பிரிட்டன் மட்டுமின்றி, நார்வே, பின்லாந்து ஆகிய நாடுகளின் வான் பகுதிகளிலும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. வெடித்துச் சிதறும் எரிமலையின் பெயர் இஜப்ஜாலாஜோகுல். இது பனிக்கட்டி மலையில் உள்ளது. எரிமலை வெடித்து நெருப்பை கக்குவதால் ஐஸ்லாந்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அலறி அடித்து ஓடி வருகின்றனர்.கடந்த ஒரு மாதத்தில் இந்த எரிமலை வெடிப்பது இது இரண்டாவது முறையாகும்.இந்த எரிமலையை சுற்றி 3 லட்சத்து 20 பேர் வசித்து வருகின்றனர். எரிமலை வெடித்ததை அடுத்து வேறு இடங்களுக்கு அவர்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior