உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 19, 2010

வரும் கல்வியாண்டு முதல் திருவாரூர், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரிகள் செயல்பட நடவடிக்கை: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்


   
               
              திருவாரூர், விழுப்புரத்தில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டிலேயே மாணவர் சேர்க்கையைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ரூ. 93 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை அவர் சனிக்கிழமை ஆய்வு செய்தார். 
 
ஆய்வுக்குப் பின்னர்  மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அளித்த பேட்டி:
 
                திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை தொடங்க தேவையான கட்டுமானப் பணிகளை வரும் 30-ம் தேதிக்குள் முடிக்க அலுவலர்களுக்கும், ஒப்பந்தக்காரர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் திருப்திகரமாக நடைபெற்று வருகின்றன. எனினும், கூடுதலாக தொழிலாளர்களைக் கொண்டு பணியை விரைவுப்படுத்துமாறு  ஒப்பந்தக்காரருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.வரும் கல்வியாண்டில் திருவாரூர், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் ஆகியவற்றுக்கு தமிழக முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார். எனவே, வரும் கல்வியாண்டிலேயே மாணவர்கள் சேர்க்கை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior