கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதியவர்களில் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 25,272 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இவர்களில் மாணவர்கள் 12,043. மாணவிகள் 13,229.தேர்ச்சி பெற்றவர்கள் 19,912 பேர். அவர்களில் மாணவர்கள் 9,226 பேர். மாணவிகள் 10,686 ஆவர். தேர்வு எழுதியவர்களிலும் தேர்ச்சி பெற்றவர்களிலும் மாணவர்களைவிட மாணவிகளே அதிகம் பேர். தமிழை முதல் படமாகப் பயின்றவர்களில் முதல் 4 இடங்களைப் பெற்றவர்கள் பெண்கள். (டி.சாருமதி, டி.பிரியா, கே.ஏ.சாருமதி, எம்.விசாலாட்சி, கே.இலக்கியா) 5-வது இடத்தைப் பிடித்த எஸ்.ராகுல் மட்டுமே ரேங்க் பட்டியலில் உள்ளார். தமிழை முதல் பாடமாகப் படிக்காதவர்களில் முதல் 3 இடங்களைப் பெற்றவர்களும் (கே.மிதிலா ரேஷ்மி, பி.எல்.மோனிஷா, ஜே.ஐஸ்வர்யா) பெண்கள்தான்.
அரசு பள்ளிகளில் கடலூர், விருத்தாசலம் ஆகிய இரு கல்வி மாவட்டங்களிலும், முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களும் பெண்கள். (பி.அன்பழகி, ஆர்.ராஜேஸ்வரி, எஸ்.அழகம்மாள், ஜி.பரணி. ). அரசு உதவிபெறும் பள்ளிகளில் கடலூர் கல்வி மாவட்டத்தில் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்கள் பெண்கள். (எம்.ரேணு மகேஸ்வரி, எஸ்.வசந்தி, டி.நித்யா, கே.திருமகள்). விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் முதல் மற்றும் 3-ம் இடத்தைப் பிடித்தவர்கள் பெண்கள். (கே.இலக்கியா, எஸ்.மீரா.) இதில் 2-வது இடத்தைப் பிடித்தவர் எஸ்.ராகுல். மெட்ரிக் பள்ளிகள் என்று அடுத்துக் கொண்டாலும் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்கள் பெண்கள்தான். ( கே.மிதிலா ரேஷ்மி, பி.எல்.மோனிஷா, ஜே.ஐஸ்வர்யா).
0 கருத்துகள்:
கருத்துரையிடுக