உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 15, 2010

கடலூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் உள்பட 50 பேருக்கு நோட்டீஸ்

 
 
டலூர்:
 
                  கடலூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டதைத் தொடர்ந்து, டாக்டர்கள் உள்பட 50 பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பதாக, மருத்துவத்துறை கூடுதல் இயக்குநர் புருசோத்தம் விஜயகுமார் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உத்தரவின்பேரில், கூடுதல் இயக்குநர் புருசோத்தம் விஜயகுமார் தலைமையிலான குழு, கடலூர் அரசு மருத்துவமனையை கடந்த 3 நாள்களாக ஆய்வு செய்தது. இதில் புருசோத்தம் விஜயகுமார் உள்ளிட்டோர் மாறு வேடத்திலும் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
 
இதுகுறித்து புருசோத்தம் விஜயகுமார் வெள்ளிக்கிழமை கூறியது: 
 
                      3 நாள்கள் நடந்த ஆய்வில் பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டன. இதுதொடர்பாக டாக்டர்கள் உள்ளிட்ட 50 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பட்டு உள்ளது.அவர்களிடம் இருந்து விளக்கம் பெற 7 நாள்கள் முதல் 15 நாள்கள் வரை கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. விளக்கம் கிடைத்ததும், அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதலாக 37 டாக்டர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். 2009-10-ம் ஆண்டில் கடலூர் அரசு மருத்துவமனை பராமரிப்புப் பணிகளுக்கு, ரூ. 74.83 லட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஒரே மாதிரியான உணவு வழங்காமல், நோயாளிகளின் நோய் தன்மைக்கு ஏற்ப வித்தியாசமான உணவு வகைகள் வழங்க அரசு முடிவு எடுத்துள்ளது. சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சுகாதாரக் கேடுகள் கண்டறியப்பட்டு உள்ளன. கடலூர் அரசு மருத்துவமனைக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவியை, கடலூர் பவர் கார்பரேஷன் நிறுவனம் வழங்க முன்வந்து உள்ளது என்றார் புருசோத்தம் விஜயகுமார். மருத்துவத்துறை கூடுதல் இயக்குநர் டாக்டர் ஜெயவீரகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior