உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 15, 2010

கடலூர் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவி டி.சாருமதி பேட்டி : டாக்டருக்கு படிக்க ஆசை

கடலூர்


                 பிளஸ்-2 தேர்வில் தமிழை மொழி பாடமாக எடுத்து கடலூர் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற டி.சாருமதி காட்டுமன்னார்கோவிலை சேர்ந்தவர். கடலூரில் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அப்பா பெயர் தண்டபாணி அம்மா பெயர் ரூபாவதி. தண்டபாணி காட்டுமன்னார்கோவிலில் தனியார் பள்ளியில் ஆசிரி யராக வேலைபார்க்கிறார். 

வெற்றி பெற்றது குறித்து மாணவி சாருமதி கூறியதாவது:-


                    எனது பெற்றோர் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் ஊக்கம் கொடுத்தனர். அதனால் நான் அதிக மதிப்பெண் பெற்றேன். டாக்டருக்கு படிக்க வேண்டும் என்பதே என் லட்சியம் ஆகும். ஏழை, எளிய மக்களுக்கு உதவ வேண்டும் என்பது எனது விருப்பம் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.


கடலூர் மாவட்டத்தில் 2-ம் இடம் பிடித்த பிரியா கூறியதாவது:-


                   என்னுடைய தந்தை தியாகராஜன், தாய் கல்யாணி மற்றும் தலைமை ஆசிரியர் மகேஷ் ஆகியோர் தினமும் படிப்பில் கவனம் செலுத்தும்படி கூறினார்கள். அவர்கள் அளித்த ஊக்கம் அதிக மதிப்பெண் பெற வைத்தது. நான் என்ஜினீயரிங் படிப்பேன். அதன்பிறகு ஐ.ஏ.எஸ். படித்து மக்களுக்கு சேவை செய்ய ஆசைப்படுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


                 தமிழை மொழி பாடமாக எடுத்து கடலூர் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளை கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அமுதவல்லி பாராட்டி கேடயம் பரிசு வழங்கினார். கடலூர் மாவட்டத்தில் தனியார் பள்ளிகள் 11, அரசு உதவி பெறும் பள்ளி 1 ஆகிய 12 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior