உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 15, 2010

கடலூர் மாவட்டம் 78.79 சதவீதம் தேர்ச்சி: கடந்த ஆண்டை விட 4.79 சதவீதம் கூடுதல்

கடலூர் : 

                 கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 25 ஆயிரத்து 272 மாணவ, மாணவிகளில் 19 ஆயிரத்து 912 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 78.79 தேர்ச்சி சதவீதமாகும். இது கடந்தாண்டைவிட 4.79 சதவீதம் கூடுதலாகும்.

               கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 153 பள்ளிகளைச் சேர்ந்த 12 ஆயிரத்து 43 மாணவர்கள், 13 ஆயிரத்து 229 மாணவிகள் என மொத்தம் 25 ஆயிரத்து 272 பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. அதில் 9 ஆயிரத்து 226 மாணவர்களும், 10 ஆயிரத்து 686 மாணவிகள் என மொத் தம் 19 ஆயிரத்து 912 பேர் தேர்ச்சி பெற்றனர். மாவட் டத்தின் மொத்த தேர்ச்சி சதவீதம் 78.79 ஆகும். இது கடந்தாண்டைவிட 4.79 சதவீதம் கூடுதலாகும். மாவட்டத்தில் முதலிடம்: கடலூர் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி சாருமதி 1173 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி பிரியா, கடலூர் செயின்ட் மேரீஸ் மெட் ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி கே.ஏ.சாருமதி ஆகியோர் 1172 மதிப் பெண் பெற்று இரண்டாம் இடம் பெற் றுள்ளனர். சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி விசாலட்சுமி 1170 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.

அதிக மதிப்பெண்

                    நெய்வேலி ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவிகள் மிதிலாரேஷ்மி 1180ம், மோனிஷா 1179ம், ஐஸ்வர்யா 1178 மதிப் பெண்கள் பெற்று அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களில் மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். இவர்கள் இரண்டாம் மொழிப்பாடமாக தமிழ் பாடத்திற்கு பதிலாக சமஸ்கிருதத்தை எடுத்து படித்தவர்கள்.

முழு தேர்ச்சி பெற்ற பள்ளிகள்

               மாவட் டத்தில் உள்ள 153 பள்ளிகளில் 12 பள்ளிகளில் தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவைகளில் நான்கு பள்ளிகள் கடந்தாண்டும் முழு தேர்ச்சி பெற்றன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior