மின் வெட்டைக் கண்டித்து கடலூரில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்.
கடலூர்:
மின்தடை உள்ளிட்டவற்றைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கடலூரில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதிகரித்துவரும் மின்வெட்டு, மின்மோட்டார்கள் இயங்காததால் பல இடங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னை போன்றவற்றுக்கு கண்டனம் தெரிவித்தும், விவசாயத்துக்கு 24 மணிநேரம் மின்சாரம் வழங்க வேண்டும், தேவையான அளவுக்கு மின்மாற்றிகளை கைவசம் இருப்பு வைத்து இருக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. கடலூர் புதுப்பாளையம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, விவசாயிகள் சங்க கடலூர் ஒன்றியச் செயலாளர் எஸ்.தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் சி.குமார், எம்.பழநி, இ.அரசன், எம்.கடவுள், டி.ராஜசேகர், எஸ்.சசிகலா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைச் செயலாளர் டி.ஏழுமலை, எம்.நாராயணன், ஜி.ஆர்.ரவிச்சந்திரன், மார்க்சிஸ்ட் கட்சியின் கடலூர் ஒன்றியச் செயலாளர் கோ.மாதவன் சிறப்புரையாற்றினர். நகரச் செயலாளர் சுப்புராயன், பொதுத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் டி.குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.மின் வெட்டைக் கண்டித்து கடலூரில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக