உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 15, 2010

விவசாயத்தில் லாபம் பெற ஊடுபயிராக நாட்டுத்துவரை

கடலூர் :

                    பாரம்பரிய விவசாய முறையில் அதிக லாபம் கிடைக்காத நிலையில், பல்வேறு மாற்று முறைகள் மூலம் விவசாயிகள் கூடுதல் லாபம் பெற்று வருகின்றனர். இந்த வகையில் ஊடுபயிர் சாகுபடி சமீப காலமாக பிரபலமாகி வருகிறது. தேயிலையின் ஊடுபயிராக குறுமிளகு சாகுபடி செய்து மேற்கு தொடர்ச்சி மலை விவசாயிகள் நல்ல லாபம் பார்த்து வருகின்றனர். இந்த வகையில், இம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மல்லி பயிரிடையே, நாட்டுத் துவரையை ஊடுபயிராக சாகுபடி செய்து வருகின்றனர். சிறுபாக்கம் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 40 கிராமங் களில் உள்ள மானாவாரி நிலங்களில், மல்லி பயிருடன் ஊடுபயிராக நாட்டு துவரையை பயிரிட்டனர். தற்போது, மல்லி பயிர் அறுவடை முடிந்துள்ளது. இந்நிலையில், ஊடுபயிராக பயிரிடப்பட்ட நாட்டுத்துவரை தற்போது பூத்துக் குலுங்கி, அதிக அளவு காய்ப் பிடிப்புடன் காணப்படுகிறது. நாட்டுத் துவரையின் அமோக விளைச்சலால் விவசாயிகள் அதிகம் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior