உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 15, 2010

அமைச்சர் அறிவித்த வெகுமதி தொகை கிடைக்குமா? என்.எல்.சி. யில் எதிர்பார்ப்பு


நெய்வேலி:
 
              என்.எல்.சி. தொழிலாளர்களுக்கு இம் மாதம் 19-ம் தேதி போனஸ் வழங்கப்படவுள்ளது. அதே நேரத்தில் கடந்த மாதம் மத்திய அமைச்சர் அறிவித்த வெகுமதித் தொகை எப்போது வழங்கப்படும் என தொழிலாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. என்.எல்.சி. தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கல்வி ஆண்டைக் கணக்கிட்டு, போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. குழந்தைகளின் கல்விச் செலவுக்கு இந்த போனஸ் தொகை பெரிதும் உதவுகிறது. இந் நிலையில் என்.எல்.சி. தொழிலாளர்களுக்கான புதிய போனஸ் மற்றும் காலாண்டு ஊக்க ஊதியம் தொடர்பான ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஏற்பட்டது. அதனடிப்படையில் தற்போது புதிய போனஸ் தொகையான ரூ.21 ஆயிரம் இம் மாதம் 19-ம் தேதி வழங்கப்படவுள்ளது. 
 
                    இதன் மூலம் சுமார் 14 ஆயிரம் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் பயனடைவார்கள். இதனிடையே கடந்த மாதம் நெய்வேலி வந்த மத்திய நிலக்கரித்துறை இணையமைச்சர் பிரகாஷ் ஜெய்ஸ்வால், என்.எல்.சி. ஊழியர்களுக்கு வெகுமதியாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தார். மே மாத ஊதியத்துடன் இத் தொகை சேர்த்து வழங்கப்படும் என தொழிலாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், வழங்கப்படவில்லை. தற்போது போனஸ் தொகையுடன வழங்கப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில் வெகுமதி தொகை வழங்குவது குறித்து நிர்வாகம் எந்த அறிவிப்பையும் வெளியிடாததால் தொழிலாளர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior