கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் 2008-09 கல்வி ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2009-2010 கல்வி ஆண்டில், பிளஸ்-2 தேர்ச்சி விகிதம் 4 சதவீதம் அதிகரித்து உள்ளது.கடலூர் மாவட்டத்தில் 2008-2009 கல்வி ஆண்டில் பிளஸ்-2 தேர்ச்சி விகிதம் 74 சதவீதமாக இருந்தது. 2009-10-ம் கல்வியாண்டுக்கான பிளஸ்-2 தேர்ச்சி விகிதம் 78 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் காப்பி அடித்ததாக 125 மாணவர்கள் பிடிபட்டனர். பிளஸ்-2 தேர்வுகளைக் கண்காணிக்க 4 இணை இயக்குநர்கள் 6 நாள்கள் முகாமிட்டுக் கண்காணித்தனர். கூடுதல் இயக்குநர் தேர்வு நடைபெற்ற அனைத்து நாள்களிலும் கடலூர் மாவட்டத்தில் தங்கி தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தார். இதனால் தேர்வில் முறைகேடுகள் பெரும்பாலும் தடுக்கப்பட்டது. இந்த நிலையில் பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் அதிகரித்து இருப்பதைக் கண்டு பள்ளித் தலைமை ஆசிரியர்கள், பெரிதும் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மற்றும் அவர்கள் பெற்று வந்த மதிப்பெண்கள் குறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி, அனைத்து தலைமை ஆசிரியர்களையும் அழைத்து, 4 முறை ஆய்வு செய்ததாகவும், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும், மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கும், தகுந்த ஆலோசனைகளைத் தெரிவித்ததாகவும் தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக