உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 15, 2010

குடிநீர் தட்டுப்பாடு: கிராம மக்கள் முற்றுகை

சிறுபாக்கம் : 

                  நல்லூர் ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம் மேலூர் ஊராட்சியில் நான்கு மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள், ஆறு குடிநீர் கை பம்புகளும் உள்ளன. தவிர இறையூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் ஊராட்சிக்கு குடிநீர் சப்ளையும் வழங்கப் பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத் திற்கும் மேலாக ஊராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்கள் மிகவும் பாதிப்படைந்தனர். இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் பலனில்லை. ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று 150க்கும் மேற்பட்டோர் நல்லூர் ஒன்றிய அலுவலகத்தை காலி குடங்களுடன் சென்று முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த வேப்பூர் இன்ஸ்பெக்டர் பஞ்சாட்சரம், சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சன்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஆணையர் ரவிசங்கர்நாத், திட்ட ஆணையர் சுலோச் சனா ஆகியோர் ஒரு வாரத்திற்குள் புதியதாக இரண்டு ஆழ்குழாய் கிணறுகள் ஏற்படுத்தி ஊராட்சியில் குடிநீர் தட்டுப் பாட்டை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior