நெய்வேலி:
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை மாநிலம் முழுவதும் வெளியானது. இதில் கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதி மாணவர்கள் பெற்ற தேர்ச்சி விவரம்: நெய்வேலி வட்டம் 11-ல் உள்ள என்.எல்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 621 மாணவிகள் தேர்வெழுதியதில் 553 பேர் தேர்ச்சி பெற்றனர். இப் பள்ளியைச் சேர்ந்த எம்.ரேணு மகேஸ்வரி 1148 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடத்தைப் பிடித்தார்.
என்.எல்.சி. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 289 பேர் தேர்வெழுதியதில் 191 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர் எம்.முத்துக்குமாரசாமி (982) பள்ளியில் முதலிடத்தைப் பிடித்தார். மந்தாரக்குப்பம் என்.எல்.சி. மேல்நிலைப்பள்ளியில் 170 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஜெயராஜ் என்ற மாணவன் 1055 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்தார்.÷நெய்வேலி வட்டம் 4-ல் உள்ள புனிதபால் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 243 பேர் தேர்வெழுதியதில் 242 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இப் பள்ளியைச் சேர்ந்த மாணவன் எம்.ஜஸ்டின் ஆல்பர்ட் 1160 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தைப் பிடித்தார்.
மேலும் இப் பள்ளியைச் சேர்ந்த கௌதம் மற்றும் ஜூபேல் ஆகிய இருவரும் கணிதப் பாடத்தில் 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். நெய்வேலி ஜவகர் மேல்நிலைப் பள்ளியில் 331 பேர் தேர்வெழுதியதில் 315 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவிகள் ஐ.மித்திலாரேஷ்மா சமஸ்கிருதப் பாடத்தை முதற்பாடமாகக் கொண்டு 1180 மதிப்பெண்கள் முதலிடத்தையும், பி.எல்.மேனிஷா 1179 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடத்தையும், ஜே.ஐஸ்வர்யா 1178 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடத்தையும் பிடித்தனர். நெய்வேலி வட்டம் 19-ல் உள்ள அரபிந்தோ வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 88 மாணவர்கள் தேர்வெழுதியதில் 53 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். விவேதா என்ற மாணவி 1111 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக