உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 17, 2010

கட​லூர் மாவட்​டத்​தில் ​ரூ.420 கோடி​யில் வெள்​ளத்​த​டுப்​புப் பணி​கள்​: மத்​திய நீர்​வள ஆணைய குழு​வி​னர் ஆய்வு

சிதம்​ப​ரம்:

                கட​லூர் மாவட்​டத்​தில் ரூ.420 கோடி​யில் வெள்​ளத்​த​டுப்பு பணி​கள் மேற்​கொள்ள மத்​திய அரசு ஒப்​பு​தல் வழங்​கு​வ​தற்​காக மத்​திய நீர்​வள ஆணைய குழு​வி​னர் மே15,16 தேதி​க​ளில் ஆய்வு மேற்​கொண்​ட​னர்.​ த​மிழ​கத்​தில் திருச்சி,​​ நாகப்​பட்​டி​னம்,​​ கட​லூர்,​​ விழுப்​பு​ரம்,​​ அரி​ய​லூர்,​​ பெரம்​ப​லூர்,​​ திருச்சி,​​ புதுக்​கோட்டை ஆகிய 8 மாவட்​டங்​க​ளில் ரூ.620 கோடி​யில் வெள்​ளத்​த​டுப்பு பணி​கள் மேற்​கொள்ள தமி​ழ​க​அ​ரசு அறி​வித்​துள்​ளது.​ இதில் 75 சத​வீத தொகை மத்​திய அர​சும்,​​ 25 சத​வீத தொகை மாநில அர​சும் வழங்​கு​கி​றது.​

               இத்​திட் ​டங்​க​ளுக்கு மத்​திய அரசு நிர்​வாக அனு​மதி மற்​றும் ஒப்​பு​தல் வழங்க தமி​ழ​கத்​தில் மேற்​கண்ட மாவட்​டங்​க​ளில் மத்​திய அரசு நீர்​வள ஆணைய இயக்​கு​நர் எஸ்.​லால்,​​ தலை​மைப் பொறி​யா​ளர் சௌத்​திரி ஆகி​யோர் மேற்​கொண்​டுள்​ள​னர்.​ க​ட​லூர் மாவட்​டத்​தில் வெள்​ளாற்று கரையை பலப்​படுத்​து​வது,​​ கொள்​ளி​டம் வடக்கு கரையை பலப்​ப​டுத்​து​தல்,​​ கான்​சா​கிப் வாய்க்கால் இரு​க​ரையை உயர்த்​து​வது உள்​ளிட்ட பணி​கள் மேற்​கொள்​ளப்​படவுள்​ளன.​ மத்​திய அரசு நீர்​வள ஆணை​யக் குழு​வி​னர் அணைக்​கரை,​​ வல்​லம்​ப​டுகை ​(கொள்​ளி​டம் ஆற்​றங்​கரை)​,​​ அம்​மாப்​பேட்டை ​(கான்​சா​கிப் வாய்க்​கால்)​,​​ பாசி​முத்​தான்​ஓடை உள்​ளிட்ட பகு​தி​களை பார்​வை​யிட்​ட​னர்.​ அ​வர்​க​ளு​டன் கட​லூர் மாவட்ட பொதுப்​ப​ணித் துறை கண்​கா​ணிப்பு பொறி​யா​ளர் நஞ்​சன்,​​ செயற்​பொ​றி​யா​ளர் செல்​வ​ராஜ் மற்​றும் அதி​கா​ரி​கள் உடன் சென்​ற​னர்.​ அப்போது அக் குழு​வி​ன​ரி​டம் விவ​சா​யி​கள் சார்​பில் உழ​வர் கூட்​ட​மைப்​புத் தலை​வர் பி.ரவீந்​தி​ரன் பல்​வேறு கோரிக்​கை​கள் அடங்​கிய மனு ஒன்றை அளித்​தார்.​ அம்​ம​னு​வில் சிதம்​ப​ரம் அருகே உள்ள அம்​மா​பேட்டை பாலம் குறு​கி​ய​தாக உள்​ள​தால் வெள்​ள​நீர் வடியை வழி செல்​லா​மல் ஆண்​டு​தோ​றும் சேதத்தை ஏற்​ப​டுத்​து​கி​றது.​ எ​னவே அங்கு அக​ல​மாக புதிய பாலம் அமைக்க வேண்​டும்.​ நீர்​நிலை நிறைந்த வாய்க்​கால்​கள் குறுக்கே எதிர்​கா​லத்​தில் பாலம் அமைக்​கும் முன் நெடுஞ்​சா​லைத்​துறை,​​ ரயில்வே துறை அனு​மதி பெற்று அவர்​க​ளு​டன் இணைந்து பொதுப்​ப​ணித்​துறை பாலத்தை அமைக்க வேண்​டும்.​

              சி​தம்​ப​ ரம்,​​ காட்​டு​மன்​னார்​கோ​வில் பகு​தி​யில் ஆண்​டு​தோ​றும் ஏற்​ப​டும் வெள்​ளச்​சே​தத்தை தவிர்க்​க​வும்,​​ விவ​சா​யத்தை காப்​பாற்ற நிரந்​தர நட​வடிக்கை எடுக்க வேண்​டும்.​ மேற்​கொண்ட வெள்​ளத்​த​டுப்​புப் பணி​கள் தொடங்கு முன்பு அப்​ப​ணி​கள் சரி​யாக நடை​பெ​று​கி​றதா என கண்​கா​ணிக்க கண்​கா​ணிப்​புக் குழு அமைக்க வேண்​டும் என பி.ரவீந்​தி​ரன் தெரி​வித்​துள்​ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior